Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகளை நினைவு கூருவதை ஏற்றுக் கொள்ள முடியாது

May 21, 2018
in News, Politics, World
0

புலி­களை நினை­வேந்­திய வட­மா­காண முதல்­வர் விக்­னேஸ்­வ­ரன் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு முன்­வைத்த கருத்தை மைத்­தி­ரி­யும், ரணி­லும் ஏற்­றுக் கொள்­கின்­ற­னரா ? வடக்­கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என்­பன அர­சின் ஒத்­து­ழைப்­பு­டன் இடம்­பெ­று­கின்­ற­னவா என்­பதை உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்­டும்.

வடக்­கின் நில­மை­களை எந்த வகை­யி­லே­னும் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அரச தலை­வர் உட­ன­டி­யாக வடக்கு மாகாண சபையை கலைத்து நாட்­டின் அமை­தி­யைச் சீர­ழிக்­கும், பிரி­வி­னை­யைத் தூண்­டும் விக்­கி­னேஸ்­வ­ரன் மற்­றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்­கைளை எடுக்க வேண்­டும் என்று மகிந்த அணி­யி­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பந்­துல குண­வர்­தன இது தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது, வடக்கு விவ­கா­ரத்­தில் மைத்­தி­ரி­யும், ரணி­லும் வாய் திறக்­காது அமைதி காத்­தால் இந்த நாடு மீண்­டும் தீப்­பற்றி எரி­யக்­கூ­டிய நிலமை ஏற்­ப­டும்.பயங்­க­ர­வா­தி­களை கொண்­டா­டும், அவர்­க­ளுக்­காக நினை­வேந்­தல் நடத்­தும் உல­கின் ஒரே ஒரு நாடு இலங்கை மட்­டு­மே­யா­கும். பிர­பா­க­ர­னுக்கு மரி­யாதை செலுத்தி போரை முடித்த மகிந்த ராஜ­பக்­சவை கள்­வன் என்று கூறு­கின்­ற­னர். அரசு இன்று பிரி­வி­னை­வா­தி­க­ளின் பக்­கம் நின்றே தீர்­மா­னம் எடுக்­கின்­றது. அர­சைச் சாடு­வ­தில் எந்த பிர­யோ­ச­ன­மும் இல்லை. மக்­கள் அடுத்த கட்­ட­மாக என்ன தீர்­மா­னம் எடுக்­கப்­போ­கின்­ற­னர் என்­பதே முக்­கி­ய­மா­ன­தா­கும் – என்­றார்.

‘வடக்­கில் தமிழ் பிரி­வி­னை­வா­தம், கிழக்­கில் முஸ்­லிம் பிரி­வி­னை­வா­தம் என்று நாட்­டின் மக்­களை நாச­மாக்­கும் சக்­தி­களை அரசு உரு­வாக்­கி­யுள்­ளது. வடக்கு மாகாண முத­லை­மைச்­சர் விக்­கி­னேஸ்­வ­ரன் மற்­றும் சிவா­ஜி­லிங்­கம் போன்­றோர் இன்று முன்­வைக்­கும் கருத்­துக்­கள் மிக­வும் பார­தூ­ர­மா­னவை.

வடக்கு – கிழக்கு தனி இராஜ்­ஜி­யம் உரு­வாக்­கப்­ப­டு­வது, பன்­னாட்­டுத் தலை­யீ­டு­கள், இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது போன்ற கருத்­துக்­களை அவர்­கள் தைரி­ய­மாக முன்­வைக்­கக் கூடிய நிலை­மையை இன்று அரசு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­துள்­ளது. ஒவ்­வொரு ஆண்­டும் புலி­களை நினைவு கூர­வும் நினை­வுத்­தூபி அமைக்­க­வும் நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தச் செயற்­பா­டு­கள் அனைத்­தை­யும் மைத்­தி­ரி­யும், ரணி­லும் வேடிக்கை பார்க்­கின்­ற­னர்.

புலி­கள் வடக்­குக்கு தேவை என்ற கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக கூறும் நிலைமை வடக்­கில் உரு­வா­கி­யுள்­ளது. வட­மா­காண சபை­யில் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் ஏற்­பா­டு­கள் செய்­யப்­ப­டு­கின்­றது. பாட­சா­லை­க­ளில், கடை­க­ளில், வீடு­க­ளில் புலி­களை நினைவு கூறும் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. வடக்­கின் நிலை­மை­களை எந்த வகை­யி­லே­னும் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’ என்று சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­தார்.

Previous Post

நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்பு

Next Post

இரா­ணு­வத்தைப் பாது­காப்புக்கு அழைக்கும் கோட்டபாய ராஜபக்ச

Next Post

இரா­ணு­வத்தைப் பாது­காப்புக்கு அழைக்கும் கோட்டபாய ராஜபக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures