கியுபாவின் ஹவானா நகர் பிரதான விமான நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த 100 பேருக்காகவும் அந்நாட்டு அரசாங்கம் இரண்டு நாட்களை துக்க தினமாக பிரகடனம் செய்துள்ளது.
அந்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள பாரிய விமான விபத்து இதுவென தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டுஅரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த நிலையில் இருந்த இரு பெண்களை மீட்பாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

