தன் மீது அசிட் வீச முற்பட்ட கணவனைத் தடுத்து நிறுத்த முற்பட்ட மனைவி, கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கோபம அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது.
குடும்பப் பிரச்சினை காரணமாக கணவர், மனைவி மீது எசிட் வீச முற்பட்ட போது, கணவன் மீது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட கணவன் படுகாயமடைந்தார் என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

