சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் சீன நாட்டை சேர்ந்த ஆணும், பெண்ணும் என தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெறும் கட்டுமானத் துறை தொடர்பான சீன வேலைத்திட்டத்தில் இவர்கள் பணிப்புரிவதாக சுங்க பிரிவு மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர்களிடமிருந்து 23 ஆயிரம் சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி சுமார் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபா என கூறப்படுகின்றது

