கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 3 பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று மரண தண்டனை விதித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவரை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவர்கள் நீதிமன்றினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று மரண தண்டனை விதித்துள்ளார்.

