பன்னியிடிய – பியகம பகுதியிலுள்ள மின் இணைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இன்று காலை கொழும்பின் பல பகுதிளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், பத்தரமுல்ல, பன்னிப்பிட்டி, தெஹிவள, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் ரத்மலான ஆகிய பகுதிகளில் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் தடைக்கான காரணம் குறித்து கண்டறிந்து விரைவில் மின்சாரத்தை வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

