சீன ராணுவத்திற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்தியா ராணுவ தளபதி நாளை இலங்கைக்கு பயணிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை அரசு தன்னுடைய நாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தை சீன ராணுவத்தின் கப்பல் படை பிரிவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு விட்டுள்ளது. இது இந்திய பகுதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியா இலங்கை அரசிடம் கவலை தெரிவித்தது. அதற்கு பதில் அளித்த இலங்கை அரசு இந்த துறைமுகம் ராணுவ தளமாக பயன்படுத்தப்படாது எனவும், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடாது எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா இலங்கை இடையே பல்வேறு நிலைகளில் உறவுநிலை மேற்கொண்ட போதிலும் தற்போது சீனாவின் வருகையை அடுத்து இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இந்திய ராணுவ தளபதி பிபின்ராவத் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் இலங்கையின் ராணுவ தளபதிகளை சந்திக்க உள்ளார். மேலும் அரசியல்தலைவர் களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராணுவ தளபதி தன்னுடைய சுற்றுப்பயணத்தின் போது கண்டி மற்றும் திரிகோணமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து தியாத்தாலாவவில் அமைந்துள்ள ராணுவ அகாடமிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

