நல்லாட்சி அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அமைச்சுக்களுக்கு உட்படும் நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) காலை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் நியமிக்கப்பட்ட அமைச்சுக்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் எவை என்பது தெரியாது காணப்படுகின்றமை புதிய அமைச்சர்களுக்கு தமது பணிகளை முன்னெடுக்க பெரும் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தன.
புதிய அமைச்சரவையிலுள்ள அமைச்சுக்களை விஞ்ஞான ரீதியில் ஒழுங்கமைப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தமை, அரசியல் தரப்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.