தைவானை தனிநாடாக கருதுமாறு விமான சேவை நிறுவனங்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இதற்கு சீனா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது.சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவங் கூறியது: ஹாங்காங், மாகு, தைவான் உள்ளிட்ட அனைத்தும் சீன நிலப்பரப்பில் இருந்து பிரிக்க முடியாத பகுதிகள். சீனா ஒரே ஒரு நாடுதான். சீனாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதனை உணர்ந்து செயல்படவேண்டும். எங்களின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும். சீன சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு, உணர்வுகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், என்றார் அவர்.