Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காணாமல் போன பெண் உறைந்த பனிக்கட்டிக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்

May 1, 2018
in News, Politics, World
0

ஆறு மாதங்களுக்குமுன் காணாமல் போன பெண். சமீபத்தில் மின்னசோட்டா பகுதியிலுள்ள ஒரு உறைந்த நிலையில் உள்ள குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளத்து நீரில் ஆறு அடி அழத்தில் உறைந்த தண்ணீருக்குள் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதைப் பார்த்து பொலிசுக்கு ஒருவர் தகவல் கொடுத்தார்.

பொலிசார் 500 பவுண்டு எடையுள்ள ஐஸ் கட்டியுடன் அவரது உடலை வெட்டி எடுத்தனர்.

ஆதாரங்கள் எதுவும் கலைந்து விடக்கூடாது என்பதற்காக ஐஸ் தானாக கரையும் வரை பொலிசாரும் தடயவியல் நிபுணர்களும் காத்திருந்தனர்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான அமெரிக்காவின் Burnsville பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத் (41), இவரது மரணத்திற்கான காரணம் எதையும் பொலிசார் தெரிவிக்காத நிலையில் அது மிகவும் சந்தேகத்திற்குரிய மரணம் என்று மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிசார், அங்கிருந்த கார்ப்பெட் ஒன்றில் இரத்தக்கறை உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

தனது ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்த எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக இரண்டு பெண்களுடன் சிகிச்சைக்காக கடந்த நவம்பர் மாதம் சென்றபோதுதான் அவரைக் கடைசியாக பார்த்ததாக அவரது ஆண் நண்பர் தெரிவித்துள்ளார்.

அவர் மது பானப் பழக்கதால் உண்டான பிரச்சினைகளால் அவதியுற்று வந்ததாக அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எலிசபெத்தின் ஆண் நண்பர் மாற்றி மாற்றி பேசி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் எலிசபெத்தின் உடல் வெகு நீண்ட காலமாக ஐஸில் இருந்துள்ளது எனவும், எனவே அவர் நவம்பர் அல்லது டிசம்பர் மாதமே இறந்திருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

காஷ்மீரில் பயங்கரவாதம்: பிரிட்டன் மாணவர்கள் கண்டனம்

Next Post

புரட்சிகர மே தின ஊர்வலம்

Next Post

புரட்சிகர மே தின ஊர்வலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures