காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரிட்டன் பல்கலை மாணவர்கள், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.பேச்சுவார்த்தை
தெற்கு ஆசிய கல்விக்கான ஐரோப்பிய நிறுவனம் மற்றும் லீசெஸ்டர் பல்கலையின், ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பல பல்கலைகழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ,காஷ்மீரில் நிலவி வரும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் சட்ட விரோத ஆயுத பரிமாற்றத்தை கட்டுப்படுத்த இந்தியா பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், தற்போது நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ய வேண்டும். பாகிஸ்தானில் செயல்படுத்தப்படும் சீனா பாகிஸ்தான் பொருளாதார திட்டங்கள் தொடர்பாக, இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், மதிக்கவும், எல்லையில் நிலவும் பதற்றத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் குறைக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
மறைமுக போர்
தெற்கு ஆசியா கல்விக்கான ஐரோப்பிய நிறுவனத்தின் இயக்குநர் ஜூனைட் குரேஷி கூறுகையில், 1989 முதல், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்புகள் வன்முறையை தூண்டிவிட்டன. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கி காஷ்மீருக்கு அனுப்பி வைத்து, வன்முறையை தூண்டின. இந்தியாவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படுத்த பாகிஸ்தான் மறைமுக யுத்தத்தை நடத்தி வருகிறது என்றார்.