விசாக நோன்மதியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தரின் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சாரணாத்தில் இருந்து கொண்டுவரப்படும் புனிதப் பொருட்கள் நாளை 28ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 2 ஆம் திகதி புதன்கிழமை வரை அலரி மாளிகையில் தரிசனத்திற்காக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரணாத் புனித பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்குத் தேவையான ஒழுங்குகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.