இலங்கையில் இறப்பர் தொழிற்துறையில் அதிக முதலீட்டினை மேற்கொள்ள சீனா இணங்கியுள்ளது.
இதற்கான உடன்படிக்கையில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த கூட்டு முதலீட்டு உடன்படிக்கை 15 தொடக்கம் 20 வருடங்களுக்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலத் திட்டங்கள் மூலம் இறப்பர் தொழிற்துறையை மேம்படுத்துவது இதன் நோக்கமென பெருந்தோட்டத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.