பத்திரிகை சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு 131 ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற கணிப்பீட்டில் இலங்கைக்கு 141 ஆம் இடம் கிடைக்கப் பெற்றிருந்தது.
உலக ஊடக சுதந்திர சுட்டி அறிக்கையின் படி, ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. இஸ்ரேல் 88 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 138 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி இடமான 180 ஆவது இடத்துக்கு வட கொரியா தெரிவாகியுள்ளது.
2017 ஆம் ஆண்டில் வெளியாகிய கருத்துக் கணிப்பிலும் நோர்வேயே முதலாவது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.