அடுத்த பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கும் நேரம் பற்றிய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கையொப்பமிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி 2.15 மணியளவில் முதலாவது அமர்வு நடாத்தப்படவுள்ளது.
பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்வது குறித்து இதற்கு முன்னர் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் மீண்டும் புதிய அமர்வு ஆரம்பிப்பது தொடர்பில் நேரம் குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.