இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் இன்று (24) நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சூத்திரம் தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தியோகபுர்வ வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளதனால் இந்த விலைச் சூத்திரம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.