இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி ( Ali Larijani ) மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் இன்றும் நாளையும் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதுடன் இந்த காலப்பகுதியில் பிரதமருக்கும் ஈரானிய சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

