ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் லண்டனில் நடைபெற்றுவரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
25 ஆவது பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா விஜயம் செய்த ஜனாதிபதி நேற்று லண்டனை சென்றடைந்தார்.
ஜனாதிபதியுடன் 10 பேரடங்கிய குழுவொன்றும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
குறித்த மாநாடு நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இது வெள்ளிக்கிழமை வரை லண்டனில் நடைபெறவுள்ளது. பொதுவான எதிர்காலம் எனும் தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.