தெலுங்கு சினிமாவின் பரபரப்பு நடிகையாகி இருக்கிறார் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக சொல்லி வருகிறார். அதோடு அவர்கள் சம்பந்தப்பட்ட பெயர்களையும் அறிவிக்க போவதாக சொன்னார்.
கடந்தவாரம் தெலுங்கு பிலிம்சேம்பர் முன்பாக திடீரென அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். அதோடு தொடர்ந்து பிரபலங்களின் பெயர்களை வெளிடுவேன் என மிரட்டினார்.
இந்நிலையில், தெலுங்குத்திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் இளைய மகனும், நடிகர் பிரபாஸின் தம்பியுமான அபிராம் என்பவருடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை இணையதளங்களில் வைரலாகி உள்ளன. இருவரும் உதட்டு முத்தம் கொடுத்தபடி உள்ளனர்.
இதுப்போன்று இன்னும் பலரின் போட்டோக்கள் வெளியாகும் என தெரிகிறது. ஆக தமிழில் சுஜி லீக்ஸ் போன்று தெலுங்கில் ஸ்ரீரெட்டி லீக்ஸ் துவங்கி உள்ளது.

