பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி மற்றும் நடிகை நிஷா. கனா காணும் காலங்கள் தொடங்கி தெய்வமகள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள் வரை பயணித்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி, நான் சிவப்பு மனிதன், வில் அம்பு உள்பட பல படங்களிலும் நடித்தார்.
சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா தற்போது கேன்சர் நோயாளிகளுக்கு விக் தயாரிக்க உதவும் வகையில் தனது நீண்ட தலைமுடியின் ஒரு பகுதியை தானம் செய்துள்ளார்.
கேன்சர் நோயாளிகளுக்கு ஹீமோ தெரபி சிகிச்சை அளிக்கும்போது முடிகள் உதிர்ந்து விடும். இதனால் அவர்களுக்கு விக் தயாரிக்க முடிதானம் வலியுறுத்தி செலிபிரிட்டிகள் இதுபோன்று செய்வதுண்டு. சமீபத்தில் ஓவியா தனது கூந்தலில் ஒரு பகுதியை தானம் செய்தார். தற்போது நிஷா செய்துள்ளார்.
“கேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடியை கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளேன் .எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக் ஆக மாறுவதில் மகிழ்ச்சி” என சமூகவலைதளத்தில் குறிபிட்டிருக்கிறார் நிஷா.
