தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) தலைவராக சட்டத்தரணி எச்.எம் அபேயரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதுடன் குருநாகல் மாவட்ட ஜனாதிபதியின் சிறப்பு வேலைத்திட்டங்களின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
