பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கும் தம்மோடு வந்து இணைந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு பகிரங்க விடுத்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தொடர்பில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ ல.சு.க. ஆகிய இரு அரசாங்க பங்காளிக் கட்சிக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

