மகிழுந்தில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை வழிமறைந்த சில நபர்கள் மோசமாக தாக்கி கொலை செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர் தனது மகிழுந்துல் Créteil (Val-de-Marne ) இல், செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணி அளவில் சென்றுகொண்டிருந்துள்ளார். எதிர் திசையில் வந்த மற்றொரு மகிழுந்து வழியை மறித்து நின்றுள்ளது. பின்னர் மகிழுந்துக்குள் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் மகிழுந்துக்குள் இருந்து இறங்கிய சில மர்ம நபர்கள், குறித்த நபரினை மகிழுந்துக்குள் இருந்து இழுத்து வெளியே கொண்டுவந்தனர். அதன் பின்னர் நபரினை மிக மோசமாக தாக்கியதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அதன் பின்னர், அவர்கள் தப்பிச்செல்ல, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு, குறித்த 33 வயதுடைய நபரினை Henri-Mondor மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
