நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஒத்துழைத்த சகலருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்று அல்லது நாளைய தினம் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி, கடந்த பெப்ருவரி 10 ஆம் திகதி மக்கள் விடுத்த செய்தியைக் கருத்தில் கொண்டு புதிய பயணமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை அடுத்த வருடம் முன்னெடுக்க முடியும் என நான் நினைக்கின்றேன்.
எம்மால் சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இல்லையென்று கூறமாட்டேன். தவறை சரிசெய்து முன்னே செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் பிரதமர் இதன்போது நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

