தமிழ் தேசிய கூட்டமைப்பு நியமித்த வேட்பாளருக்கு எதிராகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்னொரு அணி களமிறங்கிய விசித்திர சம்பவம் இன்று நடந்தது.
முன்னாள் தவிசாளரான ஜி.பிரகாஷ் என்பவரே இந்த சதி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.
சுன்னாகம் பிரதேசசபையைவிட்டு வெளியில் வந்த எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது இதனை குறிப்பிட்டார்.
தமிழர்களின் வரலாற்றில் இப்படியான நயவஞ்சகங்கள், துரோகத்தனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கட்சியின் முடிவை மீறி பிரகாஷ் செயற்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஜி.ஜி.பொன்னம்பலம் வெளிநாட்டுக்கு சென்ற சமயத்தில் தமிழ் காங்கிரஸை சேர்ந்தவர்கள், டி.எஸ்.சேனநாயக்கவுடன் சேர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு முயன்றதை போல,
குட்டிமணி, தங்கத்துரையை காட்டிக் கொடுத்ததை போல,
தலைவர் பிரபாகரனிற்கு கருணா செய்த துரோகத்தை போன்றது, ஜி.பிரகாஷ் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு செய்தது.
அதை ஏற்க முடியாது. இவர்களை கட்சியை விட்டு உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படியான துரோகத்தனங்களை உடைத்துக் கொண்டும் கட்சி முன்னேறும் என்றார்.
இதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது,
“இப்படியான நடவடிக்கைகளை கட்சி என்றுமே சகித்து கொள்ளாது. உடனடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

