உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உள்ளுராட்சி சபை நிர்வாகம் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் பற்றிய செயலமர்வு நேற்று (26) மட்டக்களப்பில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் க.யோகவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உள்ளுராட்சிமன்ற சட்டங்கள் தொடர்பிலும் உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகள், அதன் தன்மைகள், அதனால் மக்களுக்கு ஆற்றக் கூடிய சேவைகள் தொடர்பில் விரிவுரைகள் வளவாளர் அன்பழகன் குரூசினால் வழங்கப்பட்டது.
இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், கட்சி முக்கிஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.