பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட 27 பேர் தயாராகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுமென தொடர்ந்து வலியுறுத்திவரும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார, இதுகுறித்து மேலும் கூறுகையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம்திகதிக்கு முன்னர் பொறுப்புக்கள் மாற்றம் இடம்பெறாது போனால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளோம்.
எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி எதிராக வாக்களிப்போம். அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாதிருப்போம். நான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க வில்லை. உறுதியான ஐக்கிய தேசியக் கட்சியொன்றைக் கொண்டுவருவதே தனது நோக்கம்.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வேறு கட்சிகளின் தேவைகளை நிறைவேற்ற நான் தயார் இல்லை. இருப்பினும், கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பேன்” என கூறினார்.