சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி. வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.பி வங்கியில் வெல்டிங் மூலம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபா்கள், 2 லாக்கரை உடைத்து 35 லட்சம் ரூபாய்க்கு மேலாக கொள்ளை அடித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் ஞாயிறன்று இரவு நடைபெற்று இருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு வங்கியை திறந்து உள்ளே சென்றவுடன் வழக்கம் போல் வங்கி அதிகாரிகள் பணம் சரியாக உள்ளதா என சோதனையிட்ட போது தான் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.