தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 42 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவல் துறையினர் தற்கொலை செய்வது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு காவல்துறையில் பணியாற்றும் 42 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் 1039 பேர் காவல்துறை பணியில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.