ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்..
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே திரண்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 20,000-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.