67 பயணிகளோடு சென்று கொண்டிருந்த Air Canada விமானம் ஒன்று வாஷிங்டன் அருகிலிருக்கும் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.
நேற்று (மார்ச் 25) மாலை அதன் விமானி அறையிலிருந்து புகை எழுவதை விமானிகள் கண்டனர். அதைத் தொடர்ந்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில், பயணிகள் யாருக்கும் காயமில்லை. டொரண்டோவிலிருந்து புறப்பட்ட விமானம் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
சம்பவம் காரணமாக அது அருகிலிருக்கும் வாஷிங்டன் டல்லஸ் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரவுத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.