யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அல்லாலை வடக்குக் கொடிகாமத்தைச் சேர்ந்த சந்திரயோகலிங்கம் மயூரன் என்ற 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரைப் பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.