நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவான முறையில் தோல்வியடையச் செய்வோம் எனவும் அதற்கான பலம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குரிய விவாதத்தையும், வாக்களிப்பையும் முடியுமான வரை விரைவாக வழங்குமாறு அரசாங்க தரப்பு கேட்டதாகவும், அதற்கு இலகுவாக முகம்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொய்யான வாதங்களையும் கதைகளையும் பரப்பிக் கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தவர்களே அதனை பிற்போடுவதற்கு நொண்டிச் சாட்டுக்களை முன்வைத்தமை வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ள குழுக்கள் ஒன்றோடு ஒன்றிணைந்துள்ளதாகவும், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தவர்களே இன்று பல்வேறு கருத்துக்களில் முரண்பட்டுள்ளதாகவும் அரசாங்க கட்சி அமைப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.