பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தை வாக்களிப்புக்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அவர்களது தனிப்பட்ட ரீதியிலானவை. அவை கட்சியின் கருத்துக்கள் அல்லவெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டுக்கும் கட்சிக்கும் முதலிடம் கொடுத்தே கட்சி தீர்மானங்களை எடுக்கும் எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் ஆதரவு இல்லாமல் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கவோ, வெற்றிகொள்ளவோ முடியாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.