தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
துப்பாக்கிதாரர்கள் அங்காடியினுள் நுழைவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் அதில் ஒருவர் காயமடைதார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது பணயக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான
நடவடிக்கைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தாக்குதல் நடவடிக்கையின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவினர் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.