மணிப்பூர் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோஹிங்கியா அகதிகள் 3 பேரை மணிப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக நுழைந்த மூன்று ரோஹிங்கியா அகதிகளும் தெங்குனாபால் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள மோரி நகரில் கடந்த 10 நாட்களாக தங்கி இருந்துள்ளதுடன், அவர்கள் மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் மியன்மாரின் பாகுனா மற்றும் ரக்கினே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் எளிதாக இந்திய – மியன்மார் எல்லைப்பகுதி வழியாக நுழைந்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மணிப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் மீது நடைபெற்று வரும் இராணுவ அடக்குமுறை காரணமாக ஏராளமாக மக்கள் அகதிகளாக பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளதுடன், பல ரோஹிங்கியா மக்கள் இந்தியாவிற்குள்ளும் நுழைகின்றமை குறிப்பிடத்தக்கது.