பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஊழல் மோசடி மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பின்னடைவு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, பிரதமர் ரணிலுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தனர்.
இதில் ஒன்றிணைந்த எதிரணியின் 55 பேர் கையெழுத்திட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படும் நான்கு பேர் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.