ராம ராஜ்ஜிய ரதம் மாற்றுபாதையில் செல்ல முற்பட்ட போது அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை, தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட ரதம் மாற்றுப்பாதையை நோக்கி நகர முற்பட்ட போதே பொலிஸார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நேற்று மதுரையிலிருந்து தொடங்கிய ரத யாத்திரை இரவு பகுதியில் ராமேஸ்வரத்தை சென்றடைந்தது.
அங்கிருந்து இன்று தூத்துக்குடி நோக்கி புறப்படுகின்றது.
இந்நிலையில் பொலிஸார் திட்டமிட்டு கொடுத்த பாதையை விடுத்து சாமியர்கள் தமது திட்டத்தின்படி புறப்பட முயன்ற போதே பொலிஸார் தடுத்துள்ளனர்.
அதற்கு சாமியர்கள் சம்மதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேவேளை ரதத்தை தடுத்தமை தொடர்பில் விளக்கம் கொடுத்த பொலிஸார், “நீங்கள் செல்ல முற்படும் பாதை முஸ்லிம்கள் அதிகம் வசிக்குமிடம். எனவே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் தான் அந்தபாதை வழியாக செல்ல வேண்டாம் என கூறுகிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதற்கமைவாக நீண்ட நேரத்தின் பின்னர் சம்மதம் தெரிவித்த சாமியார்கள் ரதத்தை பொலிஸ் வகுத்த பாதையூடாக நகர்த்தி தூத்துக்குடி நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.