ஜேர்மனியின் அதிபராக நான்காவது முறையாகவும் பொறுப்பேற்றுள்ள அங்கெலா மெர்க்கலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே ஜேர்மனிய பிரதமருக்கு வாழ்த்துரைத்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“மீண்டும் பிரதமராக பெறுப்பேற்றுள்ளமைக்கு வாழ்த்துக்கள். இருதரப்பு உறவுகள் மேம்படும் விதத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், அதிபர் அங்கெலா மெர்க்கல் சார்ந்த கிறிஸ்தவ ஜனநாயக கட்சி 33 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எனினும் பெரும்பான்மை கிடைக்காதமையினால் அக்கட்சி தற்காலிக ஆட்சி நடத்தி வந்தது.
இந்நிலையில் நேற்று சோஷலிச குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 66.02 சதவீதம்பேர், அங்கெலா மெர்க்கல் தலைமையிலான கூட்டாட்சி தொடர்வதற்கு வாக்களித்தமைக்கு அமைவாக மீண்டும் அவர் பதவியை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.