ரஜினியின் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை பாடி பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகராக இருந்து வந்த அவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.
தர்ஷன் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்க, சத்யராஜ் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா வேடத்தில் நடித்துள்ளார். ஒரு இளம் பெண் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்க எதிர்கொள்ளும் சிரமங்களே படத்தின் ஒன்லைன் கதை.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடிக்க அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனது தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கும் அருண்ராஜா காமராஜ், திரையுலக ஸ்டிரைக் முடிந்ததும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.