Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திருட்டு

March 17, 2018
in News, Politics, World
0

இந்து ஆல­யங்­கள் தாக்­கப்­ப­டு­வது கிளி­நொச்சி மாவட்­டத்­துக்­கும் விரி­வாகி இருக்­கி­றது. நேற்று அதி­காலை கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன.

இதற்கு முன்­னர் மன்­னார், வவு­னியா மாவட்­டங்­க­ளில் உள்ள இந்து ஆல­யங்­கள் தாக்­கப்­பட்­டி­ருந்­தன. கிளி­நொச்சி முர­சு­மோட்­டைப் பகு­தி­யில் உள்ள வர­லாற்­றுச் சிறப்பு மிக்க மூன்று ஆல­யங்­களே உடைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆல­யங்­களை உடைத்து மூல விக்­கி­ர­கங்­கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து­டன் அவற்­றில் சில திரு­டப்­பட்­டு­முள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
முர­சு­மோட்டை சிவா சுப்­பி­ர­ம­ணி­யர் ஆல­யத்­தின் கத­வு­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­க­மான வேல் முறிக்­கப்­பட்­டுள்­ளது. களஞ்­சிய அறை­யும் உடைக்­கப்­பட்டு சோதனை இடப்­பட்­டுள்­ளது .

முர­சு­மோட்டை சேற்­றுக்­கண்டி முத்­து­மாரி அம்­மன் ஆல­யக் கத­வு­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­க­மும் கடு­மை­யா­கச் சேதப்­ப­டுத்­தப்­பட்­ட­து­டன் சில விக்­கி­ரங்­கள் திரு­டப்­பட்­டு­முள்­ளன. அத்­தோடு அம்­ம­னுக்­குச் சாத்­தப்­பட்­டி­ருந்த தங்­கப் பொட்­டு­கள் மற்­றும் உண்­டி­ய­லில் இருந்த பணம் என்­ப­வும் திரு­டப்­பட்­டுள்­ளன.

இரண்­டாம் கட்­டைப் பிள்­ளை­யார் ஆல­ய­மும் உடைக்­கப்­பட்டு அங்­கி­ருந்த ஒலி­பெ­ருக்கி சாதங்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. காலை­யில் பூசை வழி­பா­டு­களை மேற்­கொள்­ள­வ­தற்கு ஆல­யத்­துக்­குச் சென்­ற­போதே திருட்டு இடம்­பெற்­றமை தெரி­ய­வந்­துள்­ளது.சம்­பவ இடங்­க­ளுக்கு வருகை தந்த பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­னர். ”மூன்று ஆல­யங்­க­ளி­லும் ஒரு குழு­வி­னரே கைவ­ரிசை காட்­டி­யி­ருக்­க­லாம் என பொலி­ஸார் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க இந்த ஆல­யங்­க­ளில் திருட்­டுப் போன பெறு­ம­தி­களை விட மூல விக்­கி­ர­கத்­தினை உடைத்­தது பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக மக்­கள் கவலை தெரி­வித்­த­னர். மூல விக்­கி­ர­கங்­கள் உடைக்­கப்­பட்­டால் கும்­பா­பி­சே­கம் செய்தே அவற்றை பிர­திஷ்டை செய்ய முடி­யும்.

கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே மன்­னார் மாவட்­டத்­தில் இந்து ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு அங்­குள்ள கட­வு­ளர் சிலை­க­ளும் சேத­மாக்­கப்­பட்டு வந்­தன. இந்த ஆண்டு சிவ­ராத்­திரி தினத்­தன்று மீண்­டும் அங்கு இரண்டு ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன. கடந்த மாதம் முல்­லைத்­தீ­வி­லும் ஆல­யம் ஒன்று உடைக்­கப்­பட்டு கட­வு­ளர் சிலை கடு­மை­யா­கச் சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இவற்­றுக்கு எதி­ராக உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி இந்து அமைப்­புக்­கள் வடக்­கில் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­த­னர். இறு­தி­யில் நல்­லூ­ரி­லும் போராட்­டம் இடம்­பெற்­றது. இந்த நிலை­யி­லேயே நேற்று கிளி­நொச்­சி­யில் ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன.

Previous Post

10 வரு­டங்­க­ளாக அர­சி­யல் கைதி­யாக இருந்த முதி­ய­வர் சிறையில் இறப்பு

Next Post

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கைது

Next Post

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures