தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்படாமையாலேயே பிற்போட வேண்டியுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வை யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுடன் இணைத்து, கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டையும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய அரசிதழ் நேற்றுவரையில் வெளியாகவில்லை. அதனால் சத்தியபிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது. இருப்பினும் பத்திரிகை வெளியீடு திட்டமிட்டவாறு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.