பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் நடவடிக்கை முழுமையாக கைவிடப்படவில்லையென கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாட்டிலுள்ள அவசர கால நிலைமையைக் கருத்தில் கொண்டு பிற்போடத் தீர்மானித்ததாகவும், அதனைக் கைவிட தீர்மானிக்க வில்லையெனவும் அவர் கூறினார்.
தனிப்பட்ட ரீதியிலும், குழுவாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. ஐ.தே.க.யில் எதிர்பாராத சிலர் இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.