முட்டை இறக்குமதி செய்வது உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதாரம் தொடர்பிலான அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேவையை விட மேலதிகமான முட்டைகள் உள்நாட்டு சந்தையில் உள்ளதாகவும், தேசிய முட்டை உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்காது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.