அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹெலிகாப்டர் ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். நியூயார்க்கில் உள்ள ஈஸ்ட் ரிவர் என்ற ஆற்றில் ஹெலிகாப்டர் மூழ்கி விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென வேகமாக பறந்ததாகவும் யாரும் எதிர்பாராத வகையில் வேகமாக ஆற்றில் விழுந்து மூழ்கியதாகவும் இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த ஆற்றிற்கு அருகே நிறைய அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேர் உள்ளேயே சிக்கிய நிலையில் பைலட் மட்டும் தப்பியுள்ளார். 2 பேர் ஹெலிகாப்டருக்குள் உயிரிழந்த நிலையில் 3 பேரை மீட்புக் குழுவினர் கவலைக்கிடமான நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.