முல்லைத்தீவில் கரையோரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட கரையோரப் பிரதேசம் எங்கும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.
இதனால் இன்று அதிகாலை ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் நிலை தொடர்பில் மீனவக் குடும்பங்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் முல்லைத்தீவு நகர்ப்பகுதியெங்கும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது.
மேலும் கரையோரப் பகுதியில் வாடிகளில் குடியமர்ந்திருந்த மீனவக்குடும்பங்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனதாகவும் தெரிவித்துள்ளனர்.