சிவனொளிபாதமலைக்கு கேரளா கஞ்சாவுடன் சென்ற 24 இளைஞர்களை மடக்கிப் பிடித்தது கோரா என்ற மோப்ப நாய்.
அட்டனில் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனைகளின் போதே இவர்கள் கோராவால் பிடிக்கப்பட்டனர்.
அட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ள இந்த பொலிஸ் மோப்ப நாயால்
கேரள கஞ்சா வைத்திருந்த 22 பேரும், சட்டவிரோத சிகரெட் வைத்திருந்த 02 பேருமாக 24 பேர் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.
இவர்கள் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.