வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் முன்னாள் கணவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
21 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செந்தனியின் Saint-Ouen பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 17.30 மணியளவில் வீட்டுக்கு வந்த காவல்துறையினர், பூட்டியிருக்கும் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். உள்ளே பல வெட்டுக்காயங்களுடன் குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரின் கைக் குழந்தை கண்டுபிடிக்கமுடியவில்லை.
பின்னர், குறித்த இளம் பெண்ணின் முன்னாள் கணவரை Pontault-Combault (Seine-et-Marne) இல் வைத்து 19.00 மணி அளவில் கைது செய்தனர். குறித்த நபரிடம் இருந்து அப்பெண்ணின் ஆறு மாத கைக்குழந்தையும் மீட்டுள்ளனர்.