நிலாவெளி பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேச கோவில் பூஜைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த நிலையில் இந்த பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது.
தற்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.