கண்டியில் இடம்பெற்ற வன்முறையுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “கண்டியில் சமீப காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக சிலர் மேற்கொண்ட வன்முறைகளைத் தூண்டியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மகாசோஹோன் பலகாயவின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய வன்முறையாளர்களின் எதிர்காலத் திட்டம் மற்றும் இதற்குப் பின்னால் உள்ள அரசியல் அல்லது வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் குறித்தும் இவர்களிடம் விசாரணை இடம்பெறுகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பாக வெளிநாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டமை தொடர்பாகவும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.